இலங்கையில் பல பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள், தங்கள் சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப தகுதி பெற்றவர்களாக இருந்தும், “அஸ்வெசும” நலன்புரி திட்டத்தின் கீழ் நிதியுதவியை பெற முடியாமல் தவிக்கின்றனர்.
இந்த நிதி திட்டம் உருவாக்கப்பட்ட நோக்கம் – வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களை நிவர்த்திசெய்தல். ஆனால் நடைமுறை நிலையில், கணக்கெடுப்பு பிழைகள் மற்றும் இணையம்/தகவல் குறைபாடுகள் காரணமாக, பலர் உதவியினை இழந்துள்ளனர்.
✅ வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் ஓரமாக்கப்பட்ட நிலை:
- இன்றும் இணைய வசதியற்ற கிராமப்புற மக்கள் இத்திட்டம் குறித்து போதிய அறிவினையும் வழிகாட்டலையும் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
- 1924 இற்கு அழைக்கும் போதும், உரிய விளக்கமின்றி போன்கள் துண்டிக்கப்படுகின்றன.
- இணைய வழி முறையீடு செய்வது பற்றி தெரியாதவர்கள், தங்களது உரிமைகளை கோர முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
📌 எனது கோரிக்கை:
நலன்புரி நன்மைகள் சபையினதும், சமூக அபிவிருத்தி அமைச்சினதும் தலைமையில்,
தவறவிடப்பட்ட மக்களைக் கணக்கெடுக்கும் புதிய செயற்பாடு ஆரம்பிக்க வேண்டும்.
- ஒவ்வொரு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரின் வழியாக
- வீடு வீடாக சென்று நேரடி கணக்கெடுப்பு
- தரவுகளைத் துல்லியமாக பதிவு செய்தல்
- பின்னர் உரியவர்களுக்கு உதவித் தொகையை வழங்குதல்
🗣️ “மக்களின் குரலை கேட்க வேண்டியது அரசின் கடமையாகும்!”
அரசாங்கம் வழங்கும் நலன்கள், உண்மையாகவே தேவைப்படுவோரிடம் சென்று சேரும்போது தான் சமூக நியாயம் உறுதி செய்யப்படும்.
இந்த கோரிக்கையை ஐக்கிய காங்கிரசின் பொதுச் செயலாளராகவும், பொதுமக்கள் நலனில் ஈடுபட்ட ஒருவராகவும், நான் இங்கு உரித்தாக்குகிறேன்.
✍️ - சப்வான் சல்மான்
செயலாளர் – ஐக்கிய காங்கிரஸ்
மதுரங்குளி, புத்தளம் மாவட்டம்
📧 unitedcongress@gmail.com | 📞 +94 77 167 6166

Post a Comment