தயவுசெய்து முழுமையாக வாசிக்கவும்,
உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள், குழுமங்கள் என சகலருக்கும் பகிரவும்!
நேரமுண்டு சிந்தியுங்கள்!
சமூகத்தின் இருப்பா? எமது வரட்டு கௌரவமா?
1. கடந்த தேர்தல்களில் கண்களை மூடி வாக்களித்தீர்கள். அதற்கான மறியாதை, பலன், உரிமைகள் சமூகத்துக்கு கிடைத்ததா?
2. அரசின் அமைச்சு தொடக்கம் உயர்மட்டங்களில் எமக்கான உரிமை, அந்தஸ்த்து கிடைத்ததா?
3. உலக முஸ்லிக்களின் எதிரியான சியோனிஸ்ட் இஸ்ரேலியர்களின் அத்துமீறல்கள் எம் தேசத்தில் கட்டுப்படுத்தப்பட்டதா?
4. கொழும்பிலும், நாட்டின் பல பகுதிகளிலும் அநுமதி இன்றி இயங்கும் இஸ்ரேல் நிறுவனங்கள் மூடப்பட்டதா? அல்லது அதற்கான முயற்சிகளாவது இதுவரை நடந்ததா? அது சம்பந்தமாக அரசு ஏதாவது அறிக்கைகளை வெளியிட்டதா?
5. விசா இன்றி நாட்டிலுள்ள இஸ்ரேலியர் எவராவது வெளியேற்றப்பட்டாரா? அல்லது அதற்கான அறிவிப்பு அரசால் வெளியிடப்பட்டதா?
6. 25 கோடி இந்திய முஸ்லிம் களுக்கு எதிராக பகிரங்கமாக செயல்படும் மோடியும், RSS உம் அரசுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் இதுவரையும் வளியிடப்படாமை அதில் நாட்டுக்கும் , முஸ்லிம்களுக்கும் எதிராக எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய ஏதாவது தெளிவுகள் அரசிடம் உள்ளதா என்பதை அறிவீர்களா?
7. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் ஆட்சியை தக்கவைத்த மோடி அரசும், அதற்காக மீண்டும் நாட்டையும் முஸ்லிம்களையும், சிறுபான்மையினரையும் பகடைகாய்களாக பாவிக்க மாட்டார்கள் என்பதை நீங்கள் நம்பு கின்றீர்களா?
8. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது ஆயிரக்கனக்கான அப்பாவிகளையும், பெண்களையும் பேனைக்கத்தி, இஸ்லாமிய புத்தகங்களுக்காகவும், அஹ்னப் ஜெசீம் போன்ற பயங்கரவாத்துக்கு எதிராக கவிதை புத்தகம் எழுதியவர் என அன்று பொருப்பின்றி கைது செய்தவர்களிடம் மீண்டும் , இன்று விசாரணை கையளிக்பட்டது பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
9. மோடி அரசின் அலுத்தத்தில் , உண்மையான குற்றவாளிகள் விசாரணை செய்யப்படாமல், உதாரணமாக, ( நிலந்த ஜெயவர்த்தன, Lft Col ரவிசேகர் மிஸ்ரா, மைத்திரி, ரணில், Double S, ) விசாரணைகள் திசை திருப்பப்படுவதை அறிவீர்களா?
10. அநுர அரசு; சதிகாரன், மதவிரோதி மோடியிடம் கட்டுண்டது, எமது தேசத்தின் இறைமைக்கும் , பாதுகாப்புக்கும் அபாயகரமானது மட்டுமல்ல ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் இருப்பும் கேள்விக்கு உற்படுத்தப்பட்டுள்ளதை புரிந்து கொள்ளுங்கள்.
11. பயங்கரவாத செயல்பாடுகள் எதுவுமின்றி ருஸ்தியை தவராக கைது செய்தும், இன்றும் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதை அறிவீர்களா? தனது வேலையை இழந்தவராக அவரும் அவர் குடும்பமும் நடுத்தெருவில். இதற்கு அரசே பொருப்புக்கூற வேண்டும்.
12. 76 வருட வரலாறு பேசும் இன்றைய அரசு, கடந்த 40 வருடங்களுக்கும் மேல் இந்திய அரசை, அவர்களின் அத்துமீறல்களை, முதலீடுகளை, இறக்குமதிகளை எதிர்தவர்கள், இந்திய வரலாற்றில் மிகவும் மோசமான இனவிரோத அரசை எப்படி JVP யினருக்கு நல்லவர்களாக தென்பட்டுள்ளனர்? என்பதும் 1000 மில்லியன் சந்தேகத்திற்கிடமான கேள்வி என்பதை சற்றே சிந்தியுங்கள்!
13. மக்களையும் இளைஞர்களையும் மூலைச்சலவை செய்து நாட்டினுள் வந்த முதலீடுகளை எதிர்த்தவர்கள் இந்துத்துவா சிறுபான்மை, பௌத்த விரோத மோடியின் காலை நக்கு வது ஏன்?
14. 2026 இல் RSS இன் அகன்றபாரதம் கொள்கைக்கு எமது தேசம் இந்தியாவின் ஒருமாநிலமாக மாற்றமடையுமா? அதற்கு இன்றைய அரசு உடன்படப்போகிறதா? என்பதும் ஒரு நியாயமான சந்தேகமே!
15. கடந்தகால JVP இனரின் கொள்கை, செயல்களுக்கும் இப்போதைய நடவடிக்கைகளுக்கும் 100% வித்தியாசம் எப்படி சாத்தியமானது என்பதை தேடிப்பார்த்தேன்!
2024 February 5 இந்திய விஜயத்தின் பின்னராகவே மாற்றம் ஏற்பட்டது.
JVP இன் பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்கவின் WhatsApp குழுமத்தில் என்னையும் பல வருடங்களாக இணைத்து வைத்திருந்தார்.
JVP இன் February 2024 இந்திய விஜயத்தில் அவர்கள் சந்தித்த முக்கியஸ்த்தர்கள் சம்பந்தமான எனது சந்தேகங்களை தெளிவுபடுத்துமாறு , அக்குழுமத்தில் பல பதிவுகளையும், அதற்கான நியாயந்தையும், ஆதாரங்களையும் பதிவிட்டு , கேள்வி கேட்டதற்காக நான் உடனடியாக அக்குழுமத்தில் இருந்து அதிரடியாக விலக்கப்பட்டேன்.
அப்போதே இவர்கள் இந்திய அரசின் கயிற்றை விழுங்கிவிட்டார்கள் என்பது தெட்டத்தெளிவாக விளங்கியது மட்டுமல்ல, இவர்களை நம்பிப் பலன் இல்லை என்பதையும் இறைவன் எனக்கு காட்டித் தந்தான் என நம்புகின்றேன்.
இதுமட்டுமல்ல, முஸ்லிம் தாயின் கருவரையில் இஸ்லாமிய தீவிரவாதம் உறுவாகிறது என பாராளுமன்றில் பேசியது முதல், வைத்திய நிபுனர்களின் முடிவுகளுக்கு ஏற்பவே கொரோனா ஜனாசாக்கள் எரிக்கப் பட்டதை பாராளுமன்றில் நியாயப்படுத்தியவர் இன்றைய ஜனாதிபதி அநுர என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
கடந்த 2024 feb 05க்கு முன்னர், நானும் இவர்களை நம்பிப் பயணித்தவன். அதன் பின்னரான இந்திய அடிவருடியாக முகவர்களாக செயல்படுவது தெரிந்தே, இவர்களின் நம்பிக்கை அற்ற அரசியலை எதிர்க்கவேண்டி வலிந்து தள்ளப்பட்டேன். சமூகத்தின் நண்மைக்காக.
என்னைப் போன்று, இன்றும் பலர் இவர்களை நம்புகின்றீர்கள். அதில் பலர் அவர்களுடன் நெருக்கமாக பழகாதவர்கள்.
அதற்காக அவர்களை விமர்சிப்பவர்களை தாறுமாறாக வாயில் வருவதைவைத்து சண்டையிட்டும் , மிகவும் கேவலமான பதிவுகளையும் இட்டு எமக்குள் பிரிந்துள்ளோம் என்பதும் மிகவும் வேதனையான விடயம்.
அதுமட்டுமல்ல இப்போது 35 வயதில் இருக்கும் இளைஞன் கடந்த 20 வருடங்களாக ஆட்சிசெய்த அரசின் அடாவடிகளில் விரக்தியுற்றவனாக, கடந்த 20 வருட JVP இன் போராட்டங்களாலும், அவர்களின் அழகான பொய்களாலும் கவரப்பட்டதில் வியப்பேதும் இல்லை.
அதுபோன்று 55 வயதில் இருக்கும் ஒருவர் கடந்த 40 வருட JVP இன் நடவடிக்கைகள் வரலாற்றை நன்கு தெரிந்த என்னைப் போன்றோரின் அநுபவத்தில் அவர்களின் இரு முகங்களையும் பிரிதாளும் பக்குவமும் அநுபவமும் அவர்களை எடைபோடுவதற்கு வாய்ப்பாக அமைகிறது என்பதை இன்றைய இளைஞர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்ல கடந்த அரசுகளின் செயல்பாடுகள், ஊழல்கள், இனமத விரோதம், குறிப்பாக நம்பிய முஸ்லிம் கட்சிகள் அதன் தலமைத்துவங்கள் மீதான நம்பிக்கையற்ற நிலையில் வேறு தெரிவின்றி NPP க்கு வாக்களிக்க நிர்ப்பந்தமானோம் என்பதை எவரும் மறுக்கமுடியாது.
எனினும், இன்றைய நிலையில் எமது நாட்டையும் ஒட்டுமொத்த சமூகத்தின் நிம்மதியான வாழ்வுக்காக மோடியின் முகவர்களை எதிர்த்து வாக்களிப்பதே சாலச்சிறந்தது என்பது எனது அன்பான வேண்டுகோள்!
எனவே, சிந்தியுங்கள் மாற்றுத் தெரிவின்றி வாக்களித்தீர்கள். இவர்களைப் பற்றியும், இவர்களின் அண்டப்புழுகளை தெரிந்தும் மீண்டும் வைராக்கியத்தில் வாக்களித்து சமூகத்தின் இருப்புக்கும், பாதுகாப்புக்கும் உழைவைத்துவிடாதீர்கள்!
சமூகத்தின் இருப்பு, பாதுகாப்பு ,
தேசத்தின் இறைமை என்பவையே எனது முன்னுரிமை!
சமூக நோக்கோடு!
குவைதிர்கான்
நன்றி.
Post a Comment