Looking For Anything Specific?

 

CHN Tamil CHN Tamil Author
Title: அரகலய போராட்டம் முதல் கைது வரை: வன்முறையின் ஊடே வந்த மாற்றமா?
Author: CHN Tamil
Rating 5 of 5 Des:
2022ஆம் ஆண்டு இலங்கையை புரட்டிப் போட்ட “அரகலய” புரட்சியின் பிற்பாடுகளில், நாட்டில் ஒரு புதிய அரசியல் கட்டமைப்பு உருவாகியது. மக்கள் பேரதிர்ச்...

2022ஆம் ஆண்டு இலங்கையை புரட்டிப் போட்ட “அரகலய” புரட்சியின் பிற்பாடுகளில், நாட்டில் ஒரு புதிய அரசியல் கட்டமைப்பு உருவாகியது. மக்கள் பேரதிர்ச்சியில் வீழ்ந்த முன்னாள் ஆட்சி, அதனை மாற்றிய புதிய சக்தியாக தேசிய மக்கள் சக்தி (NPP) முன்னிறுத்தப்பட்டது. ஆனால், இன்று அந்த நம்பிக்கையின் வழிகாட்டியாக விளங்கியவர்களில் ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான், சட்டத்திற்குள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்.

இது ஒரு தனிப்பட்ட சம்பவமா? அல்லது ஒரு திட்டமிட்ட வன்முறை ஊடாக ஆட்சியைப் பிடித்தவர்களின் இருண்ட பின்னணியோ?

அரகலய போராட்டத்தின் பின்னணியில் மக்கள் கோபம், பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் முறைகேடுகள் இருந்தன என்பது உண்மைதான். ஆனால் அந்த போராட்டங்கள் சில பகுதிகளில் கட்டுப்பாடற்ற வன்முறையிலும், சொத்துச் சேதத்திலும் முடிந்தன. இன்று சிலாபம் நீதவான் நீதிமன்றம், NPP எம்.பி. மீது குற்றச்சாட்டு தொடர்பாக கைது உத்தரவு பிறப்பித்துள்ள நிலைமை, அந்த வன்முறைகளின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படலாம்.

இது ஒரு முக்கியக் கேள்வியை எழுப்புகிறது:
நாடாளுமன்றத்திற்கு புதியதொரு சக்தியாக வந்த NPP, வன்முறையூட்டும் வழியில் அதிகாரத்துக்கே சென்றதா?
அந்த வன்முறையின் வழியே பலர் சட்டத்தின் வெளியே தப்பி ஓடியுள்ளார்களா?
அல்லது தற்போதைய நடவடிக்கைகள் உண்மையில் நீதிக்கான முயற்சிகளா?

இன்று அரசியல் மாற்றம் என்பது மக்கள் விருப்பத்தின் வெளிப்பாடா, அல்லது திட்டமிட்ட ஒரு இயக்கத்தின் மூலமா என்பதைக் கேட்கும் நேரமிது.

இலங்கை மக்களின் போராட்டம், எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் உண்மைதான். ஆனால் அதன் பெயரால் கட்டுப்பாடற்ற செயல்கள் சட்டத்தின் எல்லையை மீறுகின்றபோது, அந்த மாற்றங்களும் கேள்விக்குறியாகின்றன.

---
✍️ சப்வான் சல்மான்
செயலாளர்,
ஐக்கிய காங்கிரஸ்.

Advertisement

Post a Comment

 
Top