Looking For Anything Specific?

 

CHN Tamil CHN Tamil Author
Title: பேருந்து கட்டண குறைப்பு நிறைவேறவில்லை – மக்கள் மீதான சுமை தொடர்கிறது!
Author: CHN Tamil
Rating 5 of 5 Des:
இன்று ஜூலை 1 முதல் பஸ் கட்டணங்களை 2.5% குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எரிபொருள் விலை மீண்டும் உயர்ந்ததால் அந்த முடிவு தற்காலி...



இன்று ஜூலை 1 முதல் பஸ் கட்டணங்களை 2.5% குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எரிபொருள் விலை மீண்டும் உயர்ந்ததால் அந்த முடிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

🔸
தினசரி பேருந்துக்களை நம்பி வாழ்க்கையை நடத்தும் மக்களுக்கு இது இன்னும் ஒரு பின்னடைவாகும்.
🔸
ஒருபுறம் எண்ணெய் விலை உயர்வு… மறுபுறம் விலை கட்டணங்களை குறைக்கும் திட்டங்கள் ரத்து – இதுவே அரசின் பொறுப்பற்ற செயல்களை வெளிக்காட்டுகிறது.
🔸
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களே, மக்களுக்கு கூடுதல் சுமைகளை ஏற்படுத்தும் நிலை வருந்தத்தக்கது.
ஐக்கிய காங்கிரஸ்
👉🏼
பொதுமக்கள் மீது நேரடி தாக்கம் ஏற்படுத்தும் இத்தகைய முடிவுகளை கண்டிக்கிறது.
👉🏼
எரிபொருள் விலை மேலாண்மை, போக்குவரத்து நிதி மறுசீரமைப்பு உள்ளிட்ட துறைகளில், நுட்பமான தீர்வுகள் தேவைப்படும் தருணம் இது.
✊🏼
மக்களின் நலனுக்காக தொடர்ந்தும் பேசுவோம். நீதியும் நியாயமும் நிலைநாட்டுவோம்!

சப்வான் சல்மான்
பொதுச் செயலாளர்
ஐக்கிய காங்கிரஸ்

Advertisement

Post a Comment

 
Top