ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் சூழ்நிலை, மீண்டும் ஒரு மாபெரும் மத்திய கிழக்கு மோதலின் வாயிலைத் திறந்திருக்கிறது. உலகம் தற்போது ஒரு நுணுக்கமான சமநிலைக் கட்டத்தில் நிற்கிறது. இதனைச் சமாதானமாக முடிக்கப்பட வேண்டும் என்றால், அதில் பாலஸ்தீனத்தின் நிலையும் தீர்வும் உள்ளடக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.
இது இருநாட்டு போர் மட்டுமல்ல. பல தசாப்தங்களாக பாரபட்சத்திற்கும், அகதித் துயரத்திற்கும் ஆளான பாலஸ்தீன மக்களின் நிலையை புறக்கணிக்க முடியாது.

பாலஸ்தீனமின்றி அமைதி என்பது நிரந்தரமற்ற அமைதி.

நீதியின்றி அமைதி என்பது இடைநிறுத்தமற்ற தாக்குதல்.
ஈரானோ இஸ்ரேலோ மட்டும் ஒன்றுக்கொன்று ஒப்பந்தம் செய்து கொண்டு, பாலஸ்தீன மக்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பது, வரலாற்று தவறாகும். சுதந்திரம், சமநிலை, மனித உரிமைகள் – இவை பாலஸ்தீனத்துக்கும் உரிமையே!
ஐக்கிய காங்கிரஸ், சுதந்திரமான பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. ஈரான்-இஸ்ரேல் இடையே உருவாகக்கூடிய எந்தவொரு அமைதி முயற்சியிலும், பாலஸ்தீனத்தின் விடுதலைக்கான வழிக்காட்டி இடம் பெற வேண்டும்.

அமைதி வேண்டும் என்றால், அது அனைவர் மீதும் சமநிலையாக அமைய வேண்டும்.
__
சப்வான் சல்மான்
பொதுச் செயலாளர்
ஐக்கிய காங்கிரஸ்
Post a Comment