கடந்த வியாழக்கிழமை (19), நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் யாசகம் கேட்பதும்,
சாலையோரங்களில் பொருட்கள் விற்பனையிலும் ஈடுபட்டிருந்த 21 சிறுவர்கள், பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சிறுவர்கள் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது, நம் சமூகத்தில் இன்னும் சிறுவர்கள் கல்வி, பாதுகாப்பு மற்றும் உரிமைகளிலிருந்து வஞ்சிக்கப்படுகின்றனர் என்பதற்கான சாட்சியாகும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், கண்டி, குருணாகல், சிலாபம் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த சுற்றிவளைப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஒரு சிறுவனின் இடம் பள்ளிக்கூடத்தில் இருக்கவேண்டும் – தெருவில் அல்ல!

பிச்சை எடுக்கும் நிலைக்கு சிறுவர்கள் தள்ளப்படுவது நம் அனைவருக்கும் நேர்ந்த தர்மக்கேடு!
அரசாங்கம், சமூக அமைப்புகள், பெற்றோர்கள் மற்றும் ஒவ்வொரு குடிமகனும் இந்நிலையில் கண் திறந்து, சிறுவர் பாதுகாப்பில் தங்கள் பங்கினை உணர்ந்து செயற்பட வேண்டியது அவசியமாகிறது.
சிறுவர் உரிமைகளுக்காக நமது குரலை உயர்த்துவோம்!
விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்!
- சப்வான் சல்மான்
செயலாளர்
ஐக்கிய காங்கிரஸ்
Post a Comment