முன்னணி குற்ற விசாரணை அதிகாரியும், சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளருமான ஷானி அபேசேகர அவர்கள், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CID) பணிப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

36 வருட காவல் சேவை அனுபவம் கொண்ட இவர்,

லசந்த விக்கிரமதுங்க கொலை,

பிரகீத எக்னலிகோடா காணாமற்போன வழக்கு,

2019 ஈஸ்டர் தாக்குதல் போன்ற முக்கிய விசாரணைகளை சிறப்பாக கையாள்ந்தவர்.

அவருடைய சேவைக்கு INTERPOL உட்பட சர்வதேச பாராட்டுகள் கிடைத்துள்ளன.

அரசியல் ஒழுக்கமின்மை மற்றும் பொய்யான குற்றச்சாட்டுக்களால் அவர் சிறைபடுத்தப்பட்டாலும், நீதிமன்றம் மூலம் அந்த வழக்குகள் தள்ளுபடியாகின.

இன்று, அவரை CID பணிப்பாளராக மீண்டும் நியமிக்கப்படுதல்,
சட்டமும் நீதியும் வெல்லும் என்பதற்கான நம்பிக்கையை மீண்டும் எழுப்புகிறது.

இவர் இப்பதவிக்கு தகுதியானவரா?

நீண்ட சேவை,

முக்கிய வழக்குகளை வெற்றிகரமாக கையாள்ந்த திறமை,

சர்வதேச அங்கீகாரம்...
இவை அனைத்தும் அவரை இப்பதவிக்குத் தகுதியானவராகச் செய்கின்றன.

நியாயம் பேசும் மக்கள் அனைவரும் அவரை ஆதரிக்க வேண்டிய தருணம் இது.
சப்வான் சல்மான்
செயலாளர்,
ஐக்கிய காங்கிரஸ்.
Post a Comment