புத்தளம் – கற்பிட்டி கடற்கரைப் பகுதியில் இருந்து பெருந்தொகையான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளமை, நம் சமூகத்தின் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அபாய சின்னமாகும்.
இதை முன்னிட்டு,

பசுமை வழிகளில் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் இடம்பெறுகின்றதா என்பதை கவனிக்க வேண்டும்.
சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது பொருட்கள் குறித்த தகவல்களை உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டும்.
இளைஞர்கள் நலனில் ஈடுபாட்டுடன் செயல்படும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகவியலாளர்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் மேலதிக நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான தேசிய தளத்திலான விசேட விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும்.
முக்கியமாக, இத்தகைய நடவடிக்கைகள் அரசியல் குருட்டுத் துணிச்சலின்றியும், நேர்மையான சட்ட அமல்படுத்தலுடனும் அமைய வேண்டும்.
மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என எங்கள் சமூகத்தின் எதிர்காலம் வீழ்ச்சி அடையாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில், ஐக்கிய காங்கிரஸ் இந்தக் கோரிகைகளை முன்வைக்கிறது.
சப்வான் சல்மான்
செயலாளர்,
ஐக்கிய காங்கிரஸ்.
Post a Comment