Looking For Anything Specific?

 

CHN Tamil CHN Tamil Author
Title: தேர்தலை பிற்போடுவது ஜனநாயக உரிமை மீறலாகும்! - ஐக்கிய காங்கிரஸ் கட்சி
Author: CHN Tamil
Rating 5 of 5 Des:
  உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்தாமல் இருப்ப‌து ம‌க்க‌ளின் ஜ‌ன‌நாய‌க‌ உரிமை மீற‌லாகும் என‌ ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ள‌து. புத்த‌ள‌...


 உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்தாமல் இருப்ப‌து ம‌க்க‌ளின் ஜ‌ன‌நாய‌க‌ உரிமை மீற‌லாகும் என‌ ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ள‌து. புத்த‌ள‌த்தில் ந‌டைபெற்ற‌ க‌ட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து.


கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் புத்தளம் மாவட்டத்திற்கு பொறுப்பாளருமான மெலளவி ஸப்வான் சல்மான் அவர்களின் பாலாவி உலுக்காப்பள்ளத்தில் உள்ள அவரின் அலுவலகத்தில் ஊட‌க‌விய‌லாள‌ர் ச‌ந்திப்பு இடம் பெற்றது. இதன் போது ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் புத்தளம் மாவட்டத்திற்கு பொறுப்பாளருமான மெலளவி ஸப்வான் சல்மான் அவர்கள் அங்கு கருத்துக்களை தெரிவிக்கும்.போது கூறியதாவது;

இலங்கயைில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சைகள் வேட்பு மனுத் தாக்கல் செய்து தேர்தல் திகதியும் அறிவிக்கப்பட்ட பின் திடீர் என காலவரையின்றி, காரணமின்றி தேர்தலை தாமதப்படுத்தவதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை க‌வ‌லையான‌து.

இதே வேளை தேர்தலுக்கான திகதி ஒன்றை மார்ச் 03 ஆம் திகதி தேர்தல் ஆணையகத்தினால் அறிவிக்கவுள்ளதாக மீண்டும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் தேர்தல் நடை பெறுவதற்கு சாத்தியம் இல்லை என்றும் தேர்தலை நடாத்த பொருளாதார வசதி நாட்டு அரசாங்கத்திடம் இல்லை என்ற குறைபாடுகளை ஜனாதிபதி தரப்பு சொல்லி வருகின்றது. இந்த நிலையில் சர்வதே நாடுகள் இலங்கையை அவதானித்துக் கொண்டிருக்கின்றது என்ப‌தை நாம் உண‌ர‌ வேண்டும்.

தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு தேர்தலுக்காக கட்சிகள் எல்லாம் தங்களுடைய பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருக்கின்ற நேரத்தில் தேர்தலை ஒத்தி வைப்பது, தடுத்து நிறுத்துவது ஒரு ஜனநாயக விரோத செயலாகும். தேர்தல் ஆணையகம் சில குறைபாடுகளை சொல்லுகின்றது. தேர்தலுக்கு அச்சிடிடுவதற்கு பேப்பர் இல்லை, நிதி கிடைக்கப் பெறவில்லை என‌.
.
எனவே இந்த குறைபாடுளை நீக்கி ஜனநாய ரீதியாக இந்த நாட்டில் இருக்கின்ற மக்கள் பெறுகின்ற உச்ச பச்ச உரிமை தான் ஒரு தேர்தல் என்ற‌ வ‌கையில் தேர்த‌ல் ந‌ட‌த்த ஆவன செய்ய வேண்டும்.

அத்துடன் ஐக்கிய காங்கிரஸ் கட்சி புத்தளம், மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தனியாக போட்டியிடுகின்றோம். ஒரு ஜனநாயக கட்சியைப் பொறுத்த வரை தேர்தலை சந்திப்பதற்கு ஒரு போதும் நாம் தயங்குவதும் இல்லை பின்வாங்குதும் இல்லை, தேர்தல் ஒன்றை சந்தித்து எங்களுடைய ஜனநாயக உரிமையை பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த வகையில் தேர்தலுக்கு எப்போதும் தயாராக இருக்கிறோம் என்ற செய்தியை அரசாங்கத்திற்கு சொல்லிக் கொள்கிறோம்.

எங்களைப் பொறுத்த வரை தேர்தலை நடாத்துவ‌தால் அரசாங்கத்திற்கு எந்த வித பாதிப்பும் வரப் போவதில்லை. அரசாங்கத்தை வலுப்படுத்தும் வகையில் தான் இந்த தேர்தல் நடக்கப் போகின்றது. சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் இருக்க கூடிய அந்த ஒரு குறைபாடு இலங்கை வங்கோரத்து நிலையை அடைந்து செல்கின்றது என்ற த‌வறான கண்ணோட்டம் சர்வதேச ரீதியில் நிவர்த்தி செய்யப்படும்.

எம‌து க‌ட்சி அரசாங்கத்துடன் எந்த விதமான ஒப்பந்தமும் செய்ய‌வில்லை. அரசாங்கம் என்ற வகையில் அவர்களின் ச‌ரியான‌ செயல்பாடுகளின் போது ஆத‌ரிக்கிறோம், எதிர்ப்ப‌தை எதிர்ப்போம் என‌ தெரிவித்தார்.

Advertisement

Post a Comment

 
Top