📌 சமீபத்தில் ராகமவில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில், சேயர்க்கை கருத்தரித்தல் (IVF) மூலமாக கருவான முதலாவது குழந்தையின் பிறப்பு பதிவாகியுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. இது மருத்துவத் துறையின் முன்னேற்றமாகக் கருதப்படும். ஆனால் சமூகநலத்தின் பார்வையில் நாம் ஓர் முக்கியமான கேள்வியை எழுப்ப வேண்டிய நேரம் இது.
- ஒரு ஆணுக்கு குழந்தை பெறும் இயற்கை வழி இல்லாத நிலை ஏற்பட்டால், பல சமயங்களில் அவர் மற்றொரு திருமணத்திற்குச் செல்ல முடியும்.
- அதேபோல், ஒரு பெண்ணுக்கு இயற்கை கருத்தரிப்பு சாத்தியமில்லாத சூழ்நிலையில், கணவரும் பிற திருமணத்திற்குச் செல்லலாம்.
ஆனால், இந்த இரண்டையும் தவிர்த்து, வேறொரு ஆணின் விந்து செலுத்தி ஒருவன் மனைவி கர்ப்பமாகும்போது – அந்தக் குழந்தை உண்மையில் யாருடையது? தந்தையார் என்ற அடையாளம் அந்த பிள்ளைக்கு உள்ளதா?
கணவன் உயிருடன் இருக்கையில், மனைவி மற்றொருவரின் விந்து மூலம் கர்ப்பம் தரிப்பதை ஒப்புக்கொள்வதா?இது உண்மையில் வெளிப்படையாக இல்லாத ஒருவகை உறவாகவே அமைக்கப்படுகிறதல்லவா?
அதே நேரம், கணவனின் விந்து கொண்டு செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெறும் முயற்சி தவறு அல்ல. ஏனெனில், அதில் கணவன்-மனைவி உறவின் ஒற்றுமை மீறப்படவில்லை.
✅ மனித உரிமையும் ✅ குழந்தையின் அடையாள உரிமையும் கௌரவப்படுத்த வேண்டிய நேரம் இது.
நாம் மருத்துவ முன்னேற்றங்களை ஆதரிக்கலாம். ஆனால், சமுதாயத்தின் நெறிமுறைகளும், ஒழுக்கக் கோடுகளும் தவிர்க்கப்படக்கூடாது.
📢 முன்னேற்றம் என்ற பெயரில் மரபுகளை மிதிக்க வேண்டாம்; முறைகளை சிந்தனையோடு அணுகுவோம்.
✍️ சப்வான் சல்மான்
Post a Comment