முன்னாள் ஜனாதிபதிகளும் அவர்களது குடும்பங்களும் பெற்ற விசேட சலுகைகளை ரத்து செய்யும் சட்டமூலத்திற்கான வரைவு தற்போது அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
📌 ஐக்கிய காங்கிரஸ் இது போன்ற தீர்மானங்களை முழுமையாக வரவேற்கிறது.
பதவிக்காலம் முடிந்த பின்னும் மக்களின் வரிப்பணத்தில் வாழும் அதிகார வர்க்க கலாசாரம் நிறைவடைய வேண்டும் என்பதே எங்கள் நிலை.
🔸 1986 ஆம் ஆண்டு கொண்டு வந்த "ஜனாதிபதிகளின் உரிமைகள் சட்டம்" மூலம்:
முன்னாள் ஜனாதிபதிகள்,
அவர்களின் குடும்பத்தினர்
என பலருக்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகள், வசதிகள், பாதுகாப்புகள் ஆகியவை இந்த புதிய சட்டமூலத்தின் மூலம் ரத்து செய்யப்படும்.
🔍 "வளமான நாடு – அழகான வாழ்க்கை" எனும் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தின் கீழ்,
இந்த சட்டமூலத்திற்கு 2025 ஜூன் 16ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியதுடன்,
தற்போது அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
✊ ஐக்கிய காங்கிரசின் உறுதியான நிலை:
> மக்கள் பணம், மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்.
பதவிக்கு பிறகு யாருக்கும் சிறப்புரிமை இல்லை.
சாதாரண குடிமகனுக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் சட்டம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
🗳️ ஐக்கிய காங்கிரஸ்
#SafwanSalman #UnitedCongress #CMMalhardeen

Post a Comment