"நாட்டின் நலனுக்காகவே மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. மக்களும் சில தியாகங்களை செய்ய வேண்டும்" – இது சமீபத்தில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) அதிகாரப்பூர்வ நிலைபாடாக வெளிவந்துள்ளது.
ஆனால், கடந்த அரசாங்கங்களின் ஒரு ரூபாய் மின் கட்டண உயர்வுக்கும், மக்கள் மீது சுமை போடுவதாக எழுச்சி குரல்கொடுத்து எதிர்த்த NPP, இப்போது கட்டண உயர்வை நியாயப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவது, உண்மையான எதிர்க்கட்சித் தன்மையா? அல்லது, ஆட்சிக்கு வருவதற்காக மக்கள் உணர்வுகளை ஏமாற்றிய ஒரு புதிய முகமா?
🔌 மக்களிடம் தியாகம் கோரும் முன்,
🔍 தங்களது கட்சியின் கொள்கை, நிலைபாடு மற்றும் ஒழுங்குகளை சீரமைக்க வேண்டும்.
📢 நாங்கள், மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்குவதே அரசின் கடமையாக இருக்க வேண்டும் என்று நம்புகிறோம் – அதற்காக மக்கள் மீதான சுமைகளை அதிகரிப்பதை நியாயமாக்க முடியாது.
---
🗣️ சப்வான் சல்மான்
செயலாளர்,
ஐக்கிய காங்கிரஸ்.
#eletricbill #NPP #nppsrilanka
Post a Comment