Looking For Anything Specific?

 

CHN Tamil CHN Tamil Author
Title: வெற்றி பெற்ற/ தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வாழ்த்து செய்தி
Author: CHN Tamil
Rating 5 of 5 Des:
நாடளாவிய ரீதியில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, மக்களின் நம்பிக்கையைப் பெற்றுச் செயலாற்றும் உங்களை மனமார வாழ்த்துகிறோம...

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, மக்களின் நம்பிக்கையைப் பெற்றுச் செயலாற்றும் உங்களை மனமார வாழ்த்துகிறோம். இது உங்கள் உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சமூகத்தின் நலனுக்காக நீங்கள் செய்த பணிகளின் மீதான ஒரு பெருமைமிக்க அங்கீகாரம் என நாங்கள் கருதுகிறோம்.


உங்கள் செயற்பாடுகள், அனைத்து இனங்களையும் ஒருமித்துப் பாராட்டும் நேர்மையான நிர்வாகத்தை உருவாக்கும் பணி மற்றும் பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டை இலக்காகக் கொண்டு செயல்படுவதாக நாங்கள் நம்புகிறோம்.


உங்களின் பொறுப்புள்ள பதவியில் நீங்கள் பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளில் மக்கள் நலனுக்காக சேவை புரிந்து, சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும் செயல்களில் முன்னணியில் இருப்பீர்கள் என உறுதியுடன் நம்புகிறோம்.


இத்தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும்

ஐக்கிய காங்கிரஸ் சார்பில்

மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான நல்வாழ்த்துக்கள்!


~

சப்வான் சல்மான்

பொதுச் செயலாளர்

ஐக்கிய காங்கிரஸ்


🌐நாடளாவிய ரீதியில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் வெற்றி பெற்ற / தேர்ந்தெடுக்கப்பட்ட கௌரவ உறுப்பினர்களின் விபரம். 👇

#Link 


#LGElections2025

Advertisement

Post a Comment

 
Top